Monday, July 25, 2016

Kabali Movie Review | கபாலி திரைப்படம் விமர்சனம்

நான் ஒரு ரஜினி ரசிகன் கிடையாது. அதே நேரத்தில் அவர் மேல் வெறுப்பும் கிடையாது. எல்லா தொழில் முறை நடிகர்களை போல அவரும் ஒரு நடிகர் என்ற ஒரே உணர்ச்சி மட்டும் உண்டு.....

ஒரு படத்தை பொழுதுபோக்கிற்காகவும் பார்க்கலாம் இல்லை சீரியஸாகவும் பார்க்கலாம். இந்த படம் இரண்டாம் ரகம்.

5 பாட்டு (அதுல ஒண்ணு குத்து), 4 பைட்டு, தனி ட்ராக்கில் காமெடி, பன்ச் பன்ச் ஆ டயலாக், ஹீரோ இங்க அடிச்சா அடி வாங்கினவன் இமாச்சல பிரதேசத்தில போயி விழுகறது இப்படி எல்லாம் எதிர் பார்த்து வந்தீங்கனா I am Sorry. நீங்க தப்பான படத்துக்கு வந்திட்டீங்க. படத்தில் டைரக்டர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொண்டு பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த படம் புரியும்.

படத்தில் பெயர் போடும் பொழுதே background voice over இல் Gangster பிரச்சனை எப்படி உருவாகியது என்ற கதை களன் பற்றி கூறி விடுகிறார்கள். சொல்லும்பொழுதே interesting plot நம்மை தொற்றி கொள்ளுகிறது. மலேசியாவில் இருக்கும் போதை கும்பல்களிடம் இருந்து ரஜினி எப்படி சிறு மற்றும் இளம் வயதினரை காப்பாற்றி கடைசியில் வில்லன்களை வதம் செய்வது தான் கதை.

படம் முழுக்க முழுக்க ரஜினியின் தோளில் பயணிக்கிறது. அவரது கெத்து, அந்த சோகம் கலந்த சிரிப்பு, மனைவி இருக்காளா இல்லையா என்ற தவிப்பு, 25 வருடம் கழித்து மகளை பார்த்தவுடன் காண்பிக்கும் அந்த அதிர்ச்சி கலந்த சந்தோஷம், மனைவி எங்கு இருக்கிறாள் என்று தெரிந்தவுடன் வரும் துடிப்பு என மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார்... அமைதியாக, சாந்தமாக, முறைப்பாக, விறைப்பாக எல்லா விதத்திலும் சூப்பர்....

ரஜினிக்கு இந்த படத்தில ஸ்டைல் கொஞ்சம் கொறச்சல் தான். ஆன அதுக்கு காரணம் மனைவி மற்றும் மகளை பல வருடமாக பிரிந்த ரணம். அதுக்கும் மேல அவங்க இருக்காங்களா இல்லையாங்கிற குழப்பம். இந்த குழப்பத்திலயும் ரணத்திலயும் ஸ்டைல் எப்படி பா வரும்? அதே போல் அவர் ஒரு பெரிய கேங் லீடர். அவரே எதுக்கு இறங்கி சண்டை போடணும்? கண்ணை அசைச்சா அடிக்கறதுக்கும் தூக்கறதுக்கும் ஆள் இருக்கு. இன்னமும் ஏன் அவர்கிட்ட அதை எதிர்பாக்கறீங்க?

எனக்கு புரிந்தவரை படத்தில் ரஜினி வரும் எந்த இடத்திலும் தொய்வு இல்லை. படம் தெளிவாக செல்கிறது. அதே நேரத்தில் மற்ற கேரக்டர்கள் வரும் இடங்களில் சற்று சறுக்கல் தான். 80% காட்சிகளில் ரஜினி வருவதால் தொய்வு தெரியவில்லை. ராதிகா ஆப்தே சிறிய பாத்திரம் என்றாலும் பளிச். 25 வருடங்கள் கழித்து ரஜினியை பார்த்தவுடன் அழுவார் பாருங்கள்.... பெண்கள் கண்களில் கண்ணீர் நிச்சயம். (வழக்கமா மத்தவங்கள அழ வெச்சு பழக்கப்பட்ட லேடீஸ் கூட அழுதிருவாங்க)... தன்ஷிகா ரஜினியின் பெண்ணாக Fantastic . அட்டகத்தி தினேஷ் & கலையரசன் ஓகே. வில்லன்களாக Winston Chao & Kishore கடுப்பேத்தறார் மை லார்ட். ரஜினி சென்னை வந்தோன அவரை கவனிச்சுக்க ஒரு ஆள் வருவார் (பேர் தெரியல). கிட்ட தட்ட விஜய் சேதுபதி வாய்ஸ் பேசிட்டு. அவர் ஆக்ட்டிங் சூப்பர்.. இதை தவிர ஏக பட்ட கதாபாத்திரங்கள் என்பதால் மனதில் நிற்கவில்லை.

ஒரு பெண் குழந்தை பிறக்கும் வரை மனைவி என்பவள் உங்கள் வீட்டின் மகாராணி. கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க - திடீர்ன்னு ஒரு 10 நாளா அவங்கள காணம். உங்க மனசு எப்படி துடிக்கும். எங்க சிக்கிட்டு இருக்காளோ, சாப்பிட்டாளா, கஷ்ட்ட படறாளான்னு மனசு அடிச்சுக்குமா இல்லையா? இந்த feelings அ கற்பனை பண்ணிட்டு அப்பறம் ரஜினி ராதிகா ஆப்தே வ தேடற சீனெல்லாம் பாருங்க. அப்ப தான் புரியும்

ரஜினிக்கு முதல்ல மனைவி இறந்திட்டதா தான் தெரியும். அப்பறம் தான் அவர் உயிரோட இருக்காங்கன்னு தெரியும். அதுக்கும் அப்பறம் தான் எங்க இருக்காங்கன்னு தெரியும். உடனே அவர் அவங்கள தேடிட்டு போகாம வில்லனுகளயா பாப்பாரு? நீங்காளர்ந்தா என்ன பண்ணுவீங்க?

மறுநாள் ராதிகா ஆப்தே வ பாக்க போரோம்ன்னு தெரிஞ்சோன விடியகாலைல 4 மணிக்கு தூங்காம முழிச்சிட்டு நிக்கறது. என் Heart Beat எனக்கே கேக்குதுன்னு தன்ஷிகா கிட்ட சொல்லறது. ராதிகா ஆப்தே வ 25 வருஷம் கழிச்சு பாத்தோன குடுக்கற ரியாக்ஷன். கவிதை!!!  Simply Superb...

மொத்தத்தில் கபாலி 50% மகிழ்ச்சி - 50% நெகிழ்ச்சி

ஆறிலிருந்து அறுபது வரை, புவனா ஒரு கேள்விக்குறி, எங்கேயோ கேட்ட குரல் வரிசையில் ரஜினி சார் நடிச்ச படம்....

கல்யாணமான, 35 வயசுக்கு மேல இருக்கிற, முக்கியமா நிதானமா யோசிக்கிற திறமை இருக்கிற எல்லார்க்கும் இந்த படம் புடிக்கும்..

Hats of to Ranjith for directing such a good movie and bringing out the acting capabilities of Super Star...

My Rating - 4 stars / 5

ரெண்டு விஷயம் புரியல

1) ஒரு நல்ல படத்தை ஏன் இவ்வளவு கொடுமையா விமர்சனம் பண்ணறாங்கன்னு?

இந்த படத்தை மொதல்ல Korean Language ல எடுத்திட்டு அப்பறம் நம்மாளுங்க சுட்டு இருந்தாங்கன்னா ஆஹா ஓஹோ ன்னு பாராட்டுவானுக போல...

2) மலேசியால போலீசே கிடையாதா? அப்படியே இருந்தாலும் நம்ம ஊர் போலீசை விட மொக்கையாவா இருப்பாங்க?

Saturday, June 18, 2016

Wednesday, June 15, 2016